பேட்டைசிங்கி மதுராவுக்கு

மதுரா!நல்லா சொகமா இருக்கீயளா!!

நீங்க எல்லாம் சைக்காலெஜ் படிச்சவுங்க, யோசிச்சு பாருப்பா, அப்படின்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும், அது எந்த காலேஜ், எந்த ஊருலே இருக்குதுன்னு எல்லாரையும் கேட்டு பாத்தேன்,எல்லாரும் சிரிச்சாங்க,
ஒருவேளை அவுங்களுக்கும் தெரியலியோன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.

அப்புறமா பெருசு ஆனதுக்கு அப்புறமாதான் சைக்காலெஜ் அப்படின்னா
என்னான்னு புரிஞ்சுது.

சைக்காலெஜ் அப்படின்னா மனசு.

மனசு இருக்கறவுங்கதானம்மா மனுசங்களா இருக்க முடியும். அதாவது
வாழ்க்கையிலே ஒவ்வொருத்தருக்கும் கிடைக்குற அனுபவத்தாலதான்
ஒவ்வொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கறாங்க.
அந்த அனுபவத்தை அவங்க எப்படி எடுத்துக்கறாங்க, இல்ல விட்டுட்டு அடுத்த அனுபவத்தை தேடி ஓடறாங்க, அப்படிங்கறது அவுங்க மனசை
பொருத்ததுதானே.

இட்லி+சாம்பார் + சட்னி இந்த காம்பினேஷன் மகத்துவத்த
இண்டர்நெட் போட்டோவுல காட்டுனா, லீமாவுலே இருக்குற சீசருக்கு புரியுமா, இல்ல திருநெல்வேலி அல்வான்னாதான் தெரியுமா.
அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் dulce de membrillo , சாப்புட்டு பாருங்க,
உவ்வே.,

ஒரு சில விஷயங்கள பேசும்போது, தைரியமா பேசுவோம். அதாவது நம்ம ஊரு அரசியல்வாதிங்க மாதிரி, மேடைக்கு மேடை போட்டு தாக்குவாங்க, நேரிலே பாத்தா கூழைக்கும்பிடு போட்டுக்குவாங்க.

சில விஷயங்கள பேசவே மாட்டோம், காரசாரமா வெறும் அறிக்கை மட்டும்தான் விட்டுக்குவோம்.சில நேரத்துலே சரண்டர் ஆகிருவோம்.

நான் என்ன நெனக்கிறேன்னா, ஒரு சில பாவப்பட்ட அனானி அண்ணானுங்க (அது ஏன் அக்காவா இருக்க கூடாதா)., அவங்க மனசோட
வக்கிரத்த வெளியே கொண்டுவர உங்க பதிவு காரணமா இருந்துச்சு, அப்படின்னு சொல்லியே ஆகணும்.

இதுக்கு கூட யார்ரா நீன்னு கேட்டு எனக்கு பின்னூட்டம் வரலாம், இல்லாட்டி பெருசு உளருதுன்னு விட்டுட்டு போயிர்லாம்.

உங்க பதிவுகள படிச்சுட்டு, ஒரு சில வலைஞர்களுக்கு,நெஜமாமே இப்படியெல்லாம் இருக்குமோன்ற எண்ணம் இந்த நேரம் வந்துருக்கும்.
இந்த முடி லேகியம் சாப்பிடும்போது குரங்க நினக்ககூடாது,நினைச்சா முடி வளராதுங்கற கதையா, ஆனா அடுத்த முறை கோயிலுக்கு போகும்போது, கண்டிப்பா ஆராய்ச்சிலே இறங்கி, தங்கமணிககிட்ட
எக்குத்தப்பா வாங்கி கட்டப்போறாங்க.

அப்ப இது மனசு சம்பந்தப்பட்ட விசயம்தானே.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சரியா , இல்லீங்களா, சத்தியமா நான் உங்களுக்கு ஜால்ரா அடிக்கலீங்க மதுரா., இந்த கோயில், சாமி , கடவுள் எல்லாம் மனசு சம்பந்தப்பட்ட
விஷயம். சரின்னு பட்டா எடுத்துக்கலாம். பிரியாணியிலே ஐஸ்கிரீம்
கலந்து கட்ட முடியுமா, மனசு ஏத்துக்க மாட்டிங்குதே.
பிரியாணி சாப்புட்டு முடிச்சுட்டு postre ஐஸ்கிரீம் என்ன ஃபிளேவர் வேணுன்னாலும் தனியே சாப்புட முடியுதே.

நமக்கு என்ன சம்பளம், எவ்வளவு டேக்ஸ் கட்டறம், அப்படிங்கறது நமக்கு
ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அதுக்கு மேலே
தெரிஞ்சா பிக்கல் புடுங்கல்தானெ.

இங்க எல்லாம் பாக்குற மாதிரி, நம்ம ஊரு கிராமத்துலே பாக்க முடியுமா.
பிச்சுற மாட்டாங்க பிச்சு. ஏன்னா, அப்பிடி பாக்குறது தப்புன்னு ரொம்பகாலமா நம்ம பெருசுக சொல்லிக் குடுத்துருக்காங்க.

என்னமோ போங்க, மதுரா, சிலவிஷயங்க இலை மறைவு, காய் மறைவா
இருந்தாத்தான் அழகு. நம்ம ஊரு பாவாடை-தாவணி, OSO சேலை,
அப்பத்தான் மேயும்,பால் குடுக்குற பொம்பிளய யாராவது உத்து பாப்பாங்களா. பாத்தா அதுக்கு பேரு வக்கிரம் இல்லியா.

அதனால இப்பிடி டமார் , டமார்ன்னு போட்டு உடைக்காதீங்க.

தினத்தந்தி சிந்துபாத் மாதிரி இழுத்துகிட்டே போகணும், அப்பத்தான்
புரிஞ்ச மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும்.

எங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா, கண்டிப்பா இட்லி கிடைக்காது.
தோசை இல்லாட்டி அடை உண்டு.

9 பதில்கள் “பேட்டைசிங்கி மதுராவுக்கு” க்கு;

  1. பெருசு சொல்வதென்னவென்றால்:

    பிளாக்கர் என்னமோ சொதப்புதே!
    ரொம்ப நாளா இந்தப்பக்கம் வர்லேன்னு கோவிச்சுகிச்சோ.

  2. துளசி கோபால் சொல்வதென்னவென்றால்:

    என்னங்க பெருசு,
    இம்மாம் பெரிய விசயத்தை இப்படி சிம்பிளாச் சொல்லி முடிச்சிட்டீங்க!

    மெய்யாலுமே நீர் பெருசுதான்’வே’

  3. பெருசு சொல்வதென்னவென்றால்:

    வாங் டீச்சர், எல்லாம் நீங்க குடுத்த
    டிரெயினிங்க்தானுங் டீச்சர்.

  4. பெருசு சொல்வதென்னவென்றால்:

    மதுரா போட்ட பின்னூட்டதை பிளாக்கர் பிளாக்
    செஞ்சுருச்சு.

    அதனாலெ இங்க கட் பேஸ்ட்.

    //பெருசு, கலக்கிப்புட்டீங்க … டுபுக்கு ஊர் நர்ஸ் மாதிரி ஊசி போடுறீங்களா இல்லையான்னே தெரியல!!! :) எப்படியோ என் காய்ச்சல் குறைஞ்சா சரிதான்! :) … சிரி சிரின்னு சிரிச்சு சந்தோஷமாக்கிட்டீங்க. அந்தப் பதிவுக்கு வந்து ப்ளட் ப்ரஷர் ஏறுனவங்கலாம் இங்க வந்து கொஞ்சம் சிரிச்சு சந்தோஷப்படட்டும்னு தொடுப்பு கொடுக்கிறேன் அங்க, சரியா?
    நிஜமாத்தாங்க சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு. என்ன சொல்ல வர்றீங்க, அதை எவ்வளவு அழகா சிரிப்புக்கு நடுவுல தெரிய வைக்கிறீங்க, எல்லாம் சேர்த்து நிஜமான பாராட்டுக்கள். //

  5. பொன்ஸ்~~Poorna சொல்வதென்னவென்றால்:

    ம்ம்ம்ம்ம்… :) ))

  6. பெருசு சொல்வதென்னவென்றால்:

    இங்க பாத்தீங்களா,
    மதுரா அக்காவுக்கு சப்போட் பண்ணி போட்ட
    பதிவுக்கு ஒரு அண்ணன் கூட வர்லே.

    துளசிக்கா, மதுராக்கா, பொன்ஸக்கா மட்டும் வந்துட்டு போயிருக்காங்க..

  7. கால்கரி சிவா சொல்வதென்னவென்றால்:

    இந்த பதிவு எதுக்கு புரியவேயில்லையே. என்ன மாதிரி குழல் விளக்குகளுக்கு கொஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க பெருசு.

    ஆமா… அந்த தோசை சூப்பர். தோசை மேலே உள்ளது உருளகிழங்கா, சிக்கனா

  8. Sridhar Venkat சொல்வதென்னவென்றால்:

    பெருசு (நல்ல பேருங்க) அவர்களே!

    இந்தப் பதிவை நான் முன்னாடி படிக்கவில்லை. கால்கரியார் புண்ணியத்தில் இப்பொழுது பார்த்தேன்.

    //இங்க பாத்தீங்களா,
    மதுரா அக்காவுக்கு சப்போட் பண்ணி போட்ட
    பதிவுக்கு ஒரு அண்ணன் கூட வர்லே.
    //

    மதுராவின் பதிவில் நானும் ஒரு பின்னூட்டம் பொட்டேன் என்ற முறையில், இங்கு ஒரு attendance போட்டுக்கிறேன் :-)

    மற்றபடி நீங்க சொல்லவர்றது முழுசா புரியலை. ஆனா மதுராவே வந்து சந்தோஷப்பட்டுட்டுப் போய்டாங்க போல. :-)

    //ஒரு சில விஷயங்கள பேசும்போது, தைரியமா பேசுவோம். அதாவது நம்ம ஊரு அரசியல்வாதிங்க மாதிரி, மேடைக்கு மேடை போட்டு தாக்குவாங்க, நேரிலே பாத்தா கூழைக்கும்பிடு போட்டுக்குவாங்க.

    சில விஷயங்கள பேசவே மாட்டோம், காரசாரமா வெறும் அறிக்கை மட்டும்தான் விட்டுக்குவோம்.சில நேரத்துலே சரண்டர் ஆகிருவோம்.
    //

    politically correct-ஆ பேசனும்னு சொல்றீங்க.

    It is a safe option, but it is not the only option. சரியா?

    நல்லா எழுதியிருக்கீங்க… நன்றி!

  9. sivagnanamji(#16342789) சொல்வதென்னவென்றால்:

    பெரிசு பெரிசுதான்!

மறுமொழி இடுக