1. Wine மற்றும் Gin ஆகியவைகளை Dry என்று குறிப்பிடுவதேன்? ஒரு திரவம் எவ்வாறு உலர்ந்திருக்கும்?
ரொம்பத்தான் பிகு பண்ணாதீங்க சிவா,இத்தன வருஷமா ஊத்தியும் அது தெரியாமயா ஊத்துனீங்க.
2. சினிமா பிலிம்களை பல ஆண்டுகாலமாக யார் எப்படி பாதுகாக்கிறார்கள்?
ஒரு படம் நல்லா ஓடுச்சு, அப்படின்னு சொன்னா, தியேட்டர விட்டா ஓடுச்சி????.
நல்லா ஓடாத படம் டப்பாக்குள்ள பூந்துகிச்சுன்னு சொல்றாங்களே,அந்த மாதிரிதான்,
அதோட உரிமையாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களால் பாதுகாக்கப்படுகிறது.
3. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?
அது கொண்டு போய் குடுப்பவர்களை பொருத்தது. டீயை எதுல குடுத்தா என்னங்க???
4. இந்தியாவில் ரயில் நிற்காத நிலையங்களிலும் இஞ்சின் டிரைவரும் ஸ்டேசன் மாஸ்டரும் ஒரு டென்னிஸ் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் அது என்ன?
அது அவுங்க வீட்டு தங்கமணிகளோட விளயாட்டுப்பொருள். பிரம்புல செஞ்சது.டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது கழுத்துல மாட்டிகிட்டு போவாங்க.
5. விமானத்தில் இருக்கும் ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்புறம் எதுக்கு ப்ளாக் பாக்ஸ் என்று பெயர்? அதேபோல் வெள்ளை அறிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என நிறங்களை வைத்து எதற்கு பெயர் வைக்கிறார்கள்.
ஆரஞ்சு தமிழ்ப்பெயர். தமிழ்த்துரோகிங்க செஞ்ச வேலைங்க அது.
ஒண்ணுமே எழுதாத பேப்பர கையிலே வெச்சி,கன்னா பின்னான்னு பேசறதாலேதான் அதுக்கு பேரு
வெள்ளை அறிக்கை.
உங்க கல்யாணப்பத்திரிக்கை என்ன கலருங்க??? சும்மா, கோச்சிக்காதீங்க.
6. காரில் ஆட்டோமாடிக் கியர் எவ்வாறு இயங்குகிறது?
கார்லே எப்படிங்க ஆட்டோவோட கியர் வரும்.அதுவும் மாடிலே.???
7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?
அவுங்களுக்கும் abcd algorithm தெரியுமுன்னு அறிகிறார்கள்.
8. இதய கோளாறு உள்ளவர்கள் பல் டாக்டரிடம் சென்று பல்லை சுத்தம் செய்தால் ஆண்டிபயாடிக் தருவதேன்? இதயத்திற்கும் பல்லும் என்ன தொடர்பு?
கப்பு தாங்கமுடியாததால்., பல் சுத்தம் செய்ய டாக்டரிடம் ஏன் போக வேண்டும்.பிரஷும் பினாயிலும்
சே, பினாகாவும் போதாதா, பினாகாவோட தற்போதைய பெயர் சிபாகா.
9. GPS/Satellite மற்றும் விமானம் வருவதற்கு முன் தேசங்களின் மேப்புகளை எப்படி உருவாக்கினார்கள்?
பழைய கிழிஞ்ச துணியில் உருவாக்குவாங்க.
இங்கிலீசு படத்துலே எல்லாம் பாத்துருக்கேன்.
கதாநாயகனும் வில்லனும் ஒரு கிழிஞ்ச துணி மேப்புக்கு ஆரம்பத்துலே இருந்து கடைசிவரை
எப்படி அடிச்சிக்குவாங்க.
10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?
………. ……….. …… ………………. ………………… …………….. ……………….. …………………. ………..?????.
பதிலை நீங்க பாக்க முடிஞ்சா, உங்களுக்கு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் தேவையே இல்லை.
சிவா அண்ணே, நீங்க கேட்ட கேள்வி ஒவ்வொண்ணும் முப்பது பக்கத்து பதில் எழுதற அளவுக்கு
இருக்குங்க.நமக்கு அந்த அளவுக்கு grey matter கிடையாதுங்கண்ணா.
சும்மா, ஆபிஸ்லே பிஸியா வேலை செய்யுறதா காமிக்கதான் இந்த பதிவு.
குனிஞ்சு நின்னுக்கறேன்.சும்மா கும்மிக்கங்க.
krisperu பதிப்பித்தது. 








