1. Wine மற்றும் Gin ஆகியவைகளை Dry என்று குறிப்பிடுவதேன்? ஒரு திரவம் எவ்வாறு உலர்ந்திருக்கும்?
ரொம்பத்தான் பிகு பண்ணாதீங்க சிவா,இத்தன வருஷமா ஊத்தியும் அது தெரியாமயா ஊத்துனீங்க.
2. சினிமா பிலிம்களை பல ஆண்டுகாலமாக யார் எப்படி பாதுகாக்கிறார்கள்?
ஒரு படம் நல்லா ஓடுச்சு, அப்படின்னு சொன்னா, தியேட்டர விட்டா ஓடுச்சி????.
நல்லா ஓடாத படம் டப்பாக்குள்ள பூந்துகிச்சுன்னு சொல்றாங்களே,அந்த மாதிரிதான்,
அதோட உரிமையாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களால் பாதுகாக்கப்படுகிறது.
3. சினிமா பாடல்களின் ராயல்டி எப்படி வழங்கபடுகிறது? அது முறையாக உரியவருக்கு போய் சேருமா?
அது கொண்டு போய் குடுப்பவர்களை பொருத்தது. டீயை எதுல குடுத்தா என்னங்க???
4. இந்தியாவில் ரயில் நிற்காத நிலையங்களிலும் இஞ்சின் டிரைவரும் ஸ்டேசன் மாஸ்டரும் ஒரு டென்னிஸ் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் அது என்ன?
அது அவுங்க வீட்டு தங்கமணிகளோட விளயாட்டுப்பொருள். பிரம்புல செஞ்சது.டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது கழுத்துல மாட்டிகிட்டு போவாங்க.
5. விமானத்தில் இருக்கும் ப்ளாக் பாக்ஸ் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்புறம் எதுக்கு ப்ளாக் பாக்ஸ் என்று பெயர்? அதேபோல் வெள்ளை அறிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என நிறங்களை வைத்து எதற்கு பெயர் வைக்கிறார்கள்.
ஆரஞ்சு தமிழ்ப்பெயர். தமிழ்த்துரோகிங்க செஞ்ச வேலைங்க அது.
ஒண்ணுமே எழுதாத பேப்பர கையிலே வெச்சி,கன்னா பின்னான்னு பேசறதாலேதான் அதுக்கு பேரு
வெள்ளை அறிக்கை.
உங்க கல்யாணப்பத்திரிக்கை என்ன கலருங்க??? சும்மா, கோச்சிக்காதீங்க.
6. காரில் ஆட்டோமாடிக் கியர் எவ்வாறு இயங்குகிறது?
கார்லே எப்படிங்க ஆட்டோவோட கியர் வரும்.அதுவும் மாடிலே.???
7. இரத்த பரிசோதனையின் போது ESR, CBC, LFT என்றால் என்ன? இதை வைத்து டாக்டர்கள் என்ன அறிகிறார்கள்?
அவுங்களுக்கும் abcd algorithm தெரியுமுன்னு அறிகிறார்கள்.
8. இதய கோளாறு உள்ளவர்கள் பல் டாக்டரிடம் சென்று பல்லை சுத்தம் செய்தால் ஆண்டிபயாடிக் தருவதேன்? இதயத்திற்கும் பல்லும் என்ன தொடர்பு?
கப்பு தாங்கமுடியாததால்., பல் சுத்தம் செய்ய டாக்டரிடம் ஏன் போக வேண்டும்.பிரஷும் பினாயிலும்
சே, பினாகாவும் போதாதா, பினாகாவோட தற்போதைய பெயர் சிபாகா.
9. GPS/Satellite மற்றும் விமானம் வருவதற்கு முன் தேசங்களின் மேப்புகளை எப்படி உருவாக்கினார்கள்?
பழைய கிழிஞ்ச துணியில் உருவாக்குவாங்க.
இங்கிலீசு படத்துலே எல்லாம் பாத்துருக்கேன்.
கதாநாயகனும் வில்லனும் ஒரு கிழிஞ்ச துணி மேப்புக்கு ஆரம்பத்துலே இருந்து கடைசிவரை
எப்படி அடிச்சிக்குவாங்க.
10. எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரானை அடிப்படையாக இயங்குவது. இந்த எலக்ட்ரானை கண்ணால் காணக் கூடிய மைக்ராஸ்கோப் உள்ளதா? இருந்தால் அது எங்கே உள்ளது? என்னைப் போன்ற சாமானியர்கள் போய் பார்க்க முடியுமா?
………. ……….. …… ………………. ………………… …………….. ……………….. …………………. ………..?????.
பதிலை நீங்க பாக்க முடிஞ்சா, உங்களுக்கு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் தேவையே இல்லை.
சிவா அண்ணே, நீங்க கேட்ட கேள்வி ஒவ்வொண்ணும் முப்பது பக்கத்து பதில் எழுதற அளவுக்கு
இருக்குங்க.நமக்கு அந்த அளவுக்கு grey matter கிடையாதுங்கண்ணா.
சும்மா, ஆபிஸ்லே பிஸியா வேலை செய்யுறதா காமிக்கதான் இந்த பதிவு.
குனிஞ்சு நின்னுக்கறேன்.சும்மா கும்மிக்கங்க.










8:29 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
பெருசு சூப்பருங்க உங்க பதிலு….ஆனா எனக்கு ஒன்னு தெரிஞ்சே ஆகனும் நேத்திக்கு ஆபீஸ் பார்ட்டியிலே வைன் சாப்பிடும் போது பக்கத்தில் உக்காந்திருந்த அம்மணி இட்ஸ் வெரி ட்ரை என் சொல்ல நான் கொஞ்சம் வைனை டிஸ்ஸூ பேப்பரில் நனைத்து சீ இட் இஸ் வெட் என சொல்ல அது ஜோக் என நினைத்து அந்த அம்மணி ஒரு இரண்டு நிமிடம் என்னை கட்டிபிடித்து சிரித்துக் கொண்டிருந்தார் -;)))
அங்கே ஆரம்பிச்ச டவட்டு இன்னும் விடமாட்டேங்குது.
உங்க கல்யாண பத்திரிகை உதாரணம் மிக அருமை…
எப்படியோ என் பதிவை ஹைஜாக் பண்ணீட்டிங்க…ம்ம்ம்ம்ம் ஞாபகமிருக்கும்
8:37 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
//அந்த அம்மணி ஒரு இரண்டு நிமிடம் என்னை கட்டிபிடித்து சிரித்துக் கொண்டிருந்தார் -;)))//
ஜோக்குக்காக கட்டிப் பிடிச்சாங்களா.
இல்ல, கட்டிப்பிடிக்கறதுக்காக ஜோக்கு சொன்னீங்களா.???
சிவாண்ணே நேத்து ஆபிஸ் பார்ட்டிக்கு உங்க தங்கமணி வரலியா???.
வந்திருந்தா , இந்தப்பதிவ ஆசுபத்திரில இருந்து எழுதியிருப்பீங்க.
8:39 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
ஆகா பெருசு கலக்கிட்டிங்க போங்க. ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?
8:44 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
வாங்க சந்தோசு
இன்னும் ஊருக்கு போகலீங்க.
அடுத்த மாசம் டிக்கட் வாங்க்கியாச்சு.
9:00 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
பெருசு ஜோக் சொன்னா கட்டிபிடிப்பாங்கன்னு இப்பதான் தெரிஞ்சது. இனிமே நிறைய ஜோக்குகளை ஸ்டாக் பண்ணி வைக்கனும்.
இந்த மாதிரி கண்றாவிகள் நடக்கும் என தெரிந்து தங்கமணி வருவதில்லை. வலைப்பதிவுகளும் படிப்பதில்லை அதனால் வந்த தைரியத்தில் சொல்லிவிட்டேன்.
9:02 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
சிவாண்ணே
கைவசம் ரெண்டு சலவைக்காரி ஜோக் இருக்குங்க.அனுப்பி வெக்குறேன்.
9:13 பிற்பகல் இல் நவம்பர் 23, 2006
பெருசு, மெக்ஸிகோ நாட்டு சலவைகாரி ஜோக்குங்களா? சீக்கிரம் அனுப்புங்க..
அந்த மனுசன் அதான் சுஜாதா கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே…
11:35 மு.பகல் இல் நவம்பர் 24, 2006
சிவா, அந்த அம்மனிக்கு சுமாரா என்ன வயது இருக்கும்?
(அங்க தான் வலைப்பதிவெல்லாம் படிக்கறது இல்லியே!)
11:35 மு.பகல் இல் நவம்பர் 24, 2006
சலவைக்காரி ஜோக் நமக்கும் ஒரு காபி..
2:18 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//சலவைக்காரி ஜோக் நமக்கும் ஒரு காபி..//
திருந்தாத பசங்க!
2:24 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
கலக்கல் குரு
))
இந்த சின்ன வயசுல இத்தனை கேள்விக்கு பதில் சொல்ற அளவு இம்புட்டு அறிவா?
)
3:35 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//சிவா, அந்த அம்மனிக்கு சுமாரா என்ன வயது இருக்கும்?
(அங்க தான் வலைப்பதிவெல்லாம் படிக்கறது இல்லியே!)//
சிவா, இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூன்யன் வெச்சுக்கறது.
3:36 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//சலவைக்காரி ஜோக் நமக்கும் ஒரு காபி..//
பதிவாவே போட்றலாமா சந்தோசு
3:36 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//திருந்தாத பசங்க!//
விட்ருங்க அண்ணாச்சி
3:36 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//இந்த சின்ன வயசுல இத்தனை கேள்விக்கு பதில் சொல்ற அளவு இம்புட்டு அறிவா?
)//
கவுத்துட்டீங்களே கப்பி.
4:29 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
பெருசு நீங்க எனக்கு மட்டும் தான் அல்வா குடுத்தீங்கன்னு பாத்தா ….
…
போட்டு தாக்குன்னா தாக்கு தானா எப்பவுமே!
செம காமடி.
ஏதோ சலவைக்காரி ஜோக்கெல்லாம் வேற இருக்கு … எம்மாடி நான் இந்தப் பக்கம் வரவே இல்லப்பா … இது பொண்ணுங்க வந்தா வெளிறிப் போயிருவோம் போலியே. நான் பாக்கல நீங்க நடத்துங்க …
4:30 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
பெருசு,
சூப்பரப்பு!
ஹி ஹி ஒரு சின்னவிஷயம் மெயில் அனுப்புறேப்போ நமக்கும் ஒரு “CC”.
4:31 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//அந்த அம்மனிக்கு சுமாரா என்ன வயது இருக்கும்?
//
ஓகை சார், லேடீஸ் கிட்டே வயதும் ஜெண்ட்ஸ்கிட்டே சம்பளமும் கேட்க கூடாது.
மேலும் உடன் வேலை செய்பவர்கள் எல்லாரும் சகோதர சகோதரிகளே என்ற மனபான்மையில் இருப்பவன் நான்…-;)
மேலும் இங்கே கட்டிபிடி வைத்தியம், கன்னதுடன் கன்னம் இடித்து உச் என்பவை வெகு சாதரணம்
(அப்பாடி.. ஒரு வழியா..டிபன்ஸிவா போயாச்சி)
பெருசு
இனிமேல் பகிரங்க கேள்விகளுக்கு ரகசியமா பதில் சொல்லனும் புரியுதா….
4:49 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//இனிமேல் பகிரங்க கேள்விகளுக்கு ரகசியமா பதில் சொல்லனும் புரியுதா….//
அதாவது அனானினா வந்து பதில் சொல்லனும்றீங்க.
4:57 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//ஏதோ சலவைக்காரி ஜோக்கெல்லாம் வேற இருக்கு ..//
இதெல்லாம் தலைவர் சுஜாதா ஸ்டைல்,பாம்புக்கும் கீரிக்கும் சண்டை
காட்ற மாதிரிதான். சலவைக்காரி ஜோக்கெல்லாம் என்னிக்குமே கிடையாது.
//இது பொண்ணுங்க வந்தா வெளிறிப் போயிருவோம் போலியே.
நான் பாக்கல நீங்க நடத்துங்க …//
நீங்க பாக்காதீங்க. வந்து செல்லமா குமட்டுல குத்திட்டு போங்க.
5:00 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
//ஹி ஹி ஒரு சின்னவிஷயம் மெயில் அனுப்புறேப்போ நமக்கும் ஒரு “CC”.//
ரா.ரா , அதாங்க ராயல் ராம்.
CC, வராதுங்க, BCC தான் வரும். அப்பதான் யார் யாருக்கு காப்பி போயிருக்குன்னு தெரியாது.
5:06 பிற்பகல் இல் நவம்பர் 24, 2006
பெருசு,
நானும் சில கேள்வி கேட்டுருக்கேன். எனக்கும் பகிரங்கமான பதில்கள் தேவை.
இங்க கொஞ்சம் வாங்க.
http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_24.html