கைப்புவின் சவால் , சஹி ஜவாப்.

நவம்பர் 24, 2006

பெருசு,நானும் சில கேள்வி கேட்டுருக்கேன். எனக்கும் பகிரங்கமான பதில்கள் தேவை.இப்புடி நம்ம தலை கைப்பு யார்கிட்டயும் இப்படி எறங்கி வந்ததில்ல. சரி.
கால்கரியாருக்கு பதில் சொல்லி பதிவே போட்டுடமேன்னு தெனாவெட்டா இருந்தா, வந்துட்டாருய்யா வந்துட்டாரு.

1. “அந்தா கானூன்” என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
பார்த்ததா?? நடித்ததா??
கேள்விய முழுசா கேளுங்கப்பு.சிவாஜி வந்ததுக்கபுறம் சொல்ரேன்.

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
BARBIE.

இது சும்மா தல. அப்படியே நிக்கி.

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?

கொத்துக்கறி அல்லது கருவாடு., செத்ததுக்கப்புறம் அதுதான அங்கிட்டு நடக்கும்.

வேல் வேல் வெற்றி வேல்.

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.

நீ போர்யா , போர்யாநீ , போர் நீ யா??

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?

தெரியாதூர்புரம்.

இதுக்கெல்லாம் சாட்சி யே கிடையாது.

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?

இது தெரியாதுங்களா,க்யூபாவில இருக்கறவுங்க தண்ணிக்குள்ள கபடி ஆடும்போது மூச்சு கட்டறதுக்காக
நாட்டோட பேரச்சொல்லிக்கிட்டே அது ஸ்கூபா ஆயிருக்கு.

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
அடுத்த தடவை இந்தியா வரும்போது ஏதாவது எக்ஜிபிஷன் பாத்துப்போட்டு வந்து சொல்றனப்பு.
எப்படியும் ஸ்டால் ஸ்டாலா ஏறி எறங்கப்போறம்.
எப்பவுமே அவிங்க கடைக்கு முன்னாடிதான் மசாலா அப்பளம் விப்பாய்ங்க.

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?

தப்பு சாமி, இருக்குறது ஒரே இந்தியாதான்.நீங்க எந்த இந்தியான்னு கேக்கப்பிடாது.
அதனாலே இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாது
(இந்தியாவில் எந்த மாநிலத்தில் ) அப்படின்னு இருக்கணும்.
பால் கோவா உங்களுக்கு புடிக்குமோ.???

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
BANA SINGH.

10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?
ரெட்டைவால் குருவி.

11. விஜிதரோஹனா விஜயமுனி – இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?

டிஸ்கோ சாந்தியோட அப்பா நடிச்ச விஜயபுரி வீரன் பாத்திருக்கேன். ஆனால் அவருக்கும் இதுக்கும் ஏதுனாச்சும் சம்பந்தம் இருக்க வாய்ப்பே இல்லியே.
ராசீவு காந்திய அடிச்ச சிங்கள சிப்பாயோட பேரு மாதிரி இருக்கேப்பா.

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.

சென்னை 150கிமீ போர்டு போட்ட இடத்துல வண்டிய நிறுத்தி, odometer செட் பண்ணிகிட்டுசரியா 150 கிமீ வண்டிய ஓட்டி நிறுத்தினா தெரியும். அனேகமா அந்த இடத்துலே ஏதாவது அரசியல் தலைவரோட சிலை இருக்கலாம்.இல்லாட்டி
ஏதாவது கச்சி ஆபிஸ் இருக்கலாம். முத்தன்ணன் பாலம்.

13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?சும்மா ஆபிஸ்லே ஓ.பி அடிச்சதுக்கு வட்டியும் முதலுமா தல வேலை வாங்க்கிட்டார்.
ஏதாவது படத்துலே நடிச்சிருந்தா டக்கு டக்குன்னு சொல்லலாம்.
ஓமந்தூரார் என்னும் ராமசாமி ரெட்டியார்.

14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?

நமக்கு தெரிஞ்சதெல்லாம் 5ஸ்டார்தான்.தம்முக்கு வெச்சுருந்த காசெல்லாம் ஹி ஹி.
ஆனா முத்தமெல்லாம் கிடைக்கல.

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
மன்னிச்சுக்க தல, இந்தக் கேள்விய பாஸ் பண்ணிறேன்.