என்னோட முகராசியும் மகராசியும்

பெப்ரவரி 19, 2007

வெற்றி! வெற்றி!
“இப்படி பழைய எம்.ஜி.யார் படத்துல வர மாதிரி
டைட்டில் சீன் மாதிரி ஏங்க இப்படி சவுண்டு விடறீங்க”.

மறுபடியும் தங்கமணி ரீ-எண்ட்ரி.

காலையில் சர்வேசனின் புகைப்பட போட்டி முடிவைக்
கண்டபின் நான் சொன்ன ரெண்டே வார்த்தைக்கு ஆரம்பம்.

“இல்லம்மா! போன வாரம் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் வெச்சி படம் எடுத்தமில்ல.அதை போட்டிக்கு அனுப்பி வெச்சேன். அதுக்கு ரெண்டாவது பிரைஸ் கிடைச்சிருக்கு”.

“உங்க மூஞ்சிக்கு யாரு குடுப்பாங்க”.

“மூஞ்சிக்கு இல்லம்மா, முகத்துக்கு”!

“எந்த மொகத்துக்கு”???

“அதான் அன்னிக்கு வெங்காயம்,தக்காளி,கெழங்க்கு எல்லாம் வெச்சி ஒரு படம் எடுத்தேன் இல்ல!.அந்த முகத்துக்கு”.

“அப்ப அந்த பட்டர்பிளை படம்”.

“அது நான் அனுப்பவே இல்லையே”.

ஏன்?, சரி, அந்த ஆக்டோபஸ் மாதிரி உங்க பெரிய பொண்ணு
செஞ்சாளே, அது. அதை அனுப்பிருந்தா முத பரிசே கிடைச்சிருக்கும்”

“இல்ல, அதுல லைட்டிங்க் சரியா வர்லியா,அதனால்தான்”

இதுக்கு நடுவுலே கொஞ்சம் வெளியே போகும் வேலை வந்ததால், அந்தப் பேச்சு அப்படியே நின்றது.

வீட்டிற்கு வந்ததும் இந்த பதிவை எழுத ஆரம்பிச்சேன்.
வழக்கம் போல தங்கமணி வந்ததும், ஸ்கிரீன் மாற்றம்.

பிக்காஸோவில் எதையோ தேடுவது போல, “ஏம்மா!
அன்னிக்கு எடுத்த காய்கறி படம் எல்லாம் டிரேஷ் பண்ணிட்டியா. அதை எல்லாம் இப்ப பிளாக்குலே போடல்லாமுன்னு வெச்சுருந்தேன்.இப்ப காணோம்”.

“அதானே பாத்தேன்!ஏதாவது ஒண்ணு ஒழுங்கா ஒரு எடத்துல வெச்சுருக்கீங்களா! “

இப்படியா இங்க தேடி அங்க தேடி படங்கள் கிடைக்கவே இல்ல.
மீண்டும் ஒரு போட்டி வந்தால், எடுக்கும் படங்களை உங்களுக்கு
காண்பிக்கிறேன்.
விடைபெறுமுன் என்னொட முகத்தையும் மதிச்சி ஓட்டு போட்ட
உங்க எல்லாருக்கும் நன்றி, தன்யவாத், thanks , gracias!!!.

போட்டியிலே வெற்றி பெற்ற நெல்லை சிவாவுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த அபர்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

டிஸ்க்கி : இன்னிக்கு நட்சத்திர பலன்லே மக-ராசிக்கு மறதியும் தடுமாற்றமும் அப்படின்னு போட்டிருக்கு.


தக்காளி, வெங்காயம், உருளை -சொந்தக்கதை

பெப்ரவரி 13, 2007

“எனக்கு தெரியாதுங்க, நீங்க இவ்வளவு அட்டூழியம் செய்வீங்கன்னு.

என்னடா ஆசாமிக்கு பொறுப்பு வந்திருச்சோன்னு நெனச்சேன்.
ஒருநாளும் இல்லாத திருநாளா நீங்க மார்க்கட் போயி காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர்ரேன்னு சொல்லும்போதே, உள்ளுக்கு ஏதோ சங்கதி இருக்குன்னு மனசுக்குள்ள
மணி அடிச்சுது”.

இது தங்கமணியின் அகவல்பா ஆரம்பம்.

“யாரோ பொழப்பு கெட்டுப்போயி போட்டின்னு சொல்லுவாங்களாமா , இவரு என்னமோ போட்டா புடுச்சு போடுவாராமா. அதை எல்லாரும் பாத்து ஓட்டு போடுவாங்களாமா”.

“புள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்திலேருந்து பாஸ்போர்ட் சைஸ்லே போட்டோ வேணுமின்னு கேட்டு ரெண்டு வாரம் ஆகுது. இவ்வளவு செலவு செஞ்சி டிஜிட்டல் காமரா வாங்கி என்ன
பிரியோஜனம். அவுங்க ஞாபகம் கொஞ்சமாவது வருதா பாருங்க”.

“போங்க ,போயி, யாரோ யாரயோ திட்டி ஏதாவது வாசிப்பாங்க, அதையெல்லாம் படிச்சுட்டு கொட்டிக்கறதுக்கு வாங்க”.

அப்படியே தலையை தொங்கப்போட்டுட்டு வீட்டுக்கு வெளியே போயி காரை எடுத்து வெளியே நிறுத்தி, புதுசா வாங்கிட்டு வந்த “பொறி” டிஸ்கை உச்ச ஸ்தாயிதியிலே அலற உட்டா, gasolina reggaton கேட்டுட்டு காரை கழுவிட்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரன் ஒரு இளிப்பு இளிச்சான். இவனும் நம்ம கேஸ்தாண்டான்னு நெனச்சிகிட்டே ஒரு வழியா
காரை சுத்தம் செஞ்சு முடிச்சாச்சு.

அப்படியே தோட்டத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு. குப்பையை பையிலே போட்டு கட்டி வெளியிலே வெச்சாச்சு.

நல்ல பையனா வீட்டுக்குள்ள தலைய நீட்டுனேன்.

சரி, சரி மணி ஒண்ணாகப்போகுது. சாப்புட வாங்க. நீங்க கேட்ட தக்காளி,வெங்காயம்,உருளக்கிழங்கு எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன். இது தங்கமணியின் குரல்.

ஹி!ஹி ன்னு வழிஞ்சுகிட்டே அப்பிடியே குசினி அறைக்குள் எண்டர் குடுத்தேன்.

“நீங்க வெட்டி உபயோகம் செய்வீங்களோ, வெட்டாம செய்வீங்களோ, இருக்குற வெங்காயம் raitha செய்ய தேவைப்படும்.இல்லாட்டி இன்னிக்கு பிரியாணிக்கு raitha கிடையாது”.

“சாயந்திரம் பெரியவளோட பிரண்ட்ஸ் வருவாங்க. அவுங்களுக்கு french fry செய்யணும். அதனால பாத்து உபயோகம் செய்யுங்க”.

“சரிம்மா, தக்காளி நாளைக்கு சட்னி செய்ய வேணுமா, அதை தனியா எடுத்து வெச்சிடட்டுமா”. இது நான்.

அப்படியே புள்ளைங்களும் ஆஜர். “ஹையா! இன்னிக்கு இன்னிக்கி அப்பா சமைக்க போறாரா.நாங்களும் உதவி செய்யலாமா”, இது பெரியவ கேட்டது.

“இல்ல ராஜாத்தி”, விஷயத்தை உப்பு புளி எல்லாம் போட்டு வெளக்கி சொல்ல,”அப்பா, நாங்களுப்பா, இதை முன்னாடியே சொல்லிருந்தா, எவ்வளவு கிரியேட்டிவ்வா செஞ்சிருக்கலாம்”.

“ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க கூத்தை., சாப்டுட்டு அப்புறமா என்னமோ செய்யுங்க.எனக்கு வீட்லே நெறய வேலை இருக்குது”. இது தங்கமணி.

அப்புறமா நடந்த கூத்தை 20ம் தேதிக்கு அப்புறமா படம் போட்டு விளக்குறேன்.இல்லாட்டி சர்வேசன் கோச்சிக்குவாரு.


என்னங்க இது?????????

பெப்ரவரி 2, 2007

இதய பலகீனம் ஆனவர்கள்,சிறார்கள், வயதானவர்கள்,அடிக்கடி
ராத்திரியில் மூச்சா போகிறவர்கள் தயவு செய்து இந்த படத்தை பாக்கதீங்க.
சத்தியமா யாரையும் பயமுறுத்தும் எண்ணம் இல்லீங்க.
சமீபத்தில் சென்னையில் ஒரு புகை வண்டி நிலையத்தில்
கண்டது.
இதன் கூட எடுத்த மற்ற படங்ககளை சத்தியமாக வெளியிடும் எண்ணம் இல்லை.
ஏனென்றால் எந்தப்பகுதியும் அடையாளம் காட்டுற மாதிரி இல்லீங்க.
Posted by Picasa


எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.

பெப்ரவரி 1, 2007

ஒண்ணும் இல்லிங்க தம்பி ! ரொம்ப நேரமா செல் போன்ல பேசிக்கிட்டே இருந்தா இப்பிடி ஆகுமாம். நம்ம ஊர்ல ரொம்ப பயபுள்ளங்க எல்லாம் இப்பிடித்தானே ஸ்டைலா திரியராங்க.