“எனக்கு தெரியாதுங்க, நீங்க இவ்வளவு அட்டூழியம் செய்வீங்கன்னு.
என்னடா ஆசாமிக்கு பொறுப்பு வந்திருச்சோன்னு நெனச்சேன்.
ஒருநாளும் இல்லாத திருநாளா நீங்க மார்க்கட் போயி காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர்ரேன்னு சொல்லும்போதே, உள்ளுக்கு ஏதோ சங்கதி இருக்குன்னு மனசுக்குள்ள
மணி அடிச்சுது”.
இது தங்கமணியின் அகவல்பா ஆரம்பம்.
“யாரோ பொழப்பு கெட்டுப்போயி போட்டின்னு சொல்லுவாங்களாமா , இவரு என்னமோ போட்டா புடுச்சு போடுவாராமா. அதை எல்லாரும் பாத்து ஓட்டு போடுவாங்களாமா”.
“புள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்திலேருந்து பாஸ்போர்ட் சைஸ்லே போட்டோ வேணுமின்னு கேட்டு ரெண்டு வாரம் ஆகுது. இவ்வளவு செலவு செஞ்சி டிஜிட்டல் காமரா வாங்கி என்ன
பிரியோஜனம். அவுங்க ஞாபகம் கொஞ்சமாவது வருதா பாருங்க”.
“போங்க ,போயி, யாரோ யாரயோ திட்டி ஏதாவது வாசிப்பாங்க, அதையெல்லாம் படிச்சுட்டு கொட்டிக்கறதுக்கு வாங்க”.
அப்படியே தலையை தொங்கப்போட்டுட்டு வீட்டுக்கு வெளியே போயி காரை எடுத்து வெளியே நிறுத்தி, புதுசா வாங்கிட்டு வந்த “பொறி” டிஸ்கை உச்ச ஸ்தாயிதியிலே அலற உட்டா, gasolina reggaton கேட்டுட்டு காரை கழுவிட்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரன் ஒரு இளிப்பு இளிச்சான். இவனும் நம்ம கேஸ்தாண்டான்னு நெனச்சிகிட்டே ஒரு வழியா
காரை சுத்தம் செஞ்சு முடிச்சாச்சு.
அப்படியே தோட்டத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு. குப்பையை பையிலே போட்டு கட்டி வெளியிலே வெச்சாச்சு.
நல்ல பையனா வீட்டுக்குள்ள தலைய நீட்டுனேன்.
சரி, சரி மணி ஒண்ணாகப்போகுது. சாப்புட வாங்க. நீங்க கேட்ட தக்காளி,வெங்காயம்,உருளக்கிழங்கு எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன். இது தங்கமணியின் குரல்.
ஹி!ஹி ன்னு வழிஞ்சுகிட்டே அப்பிடியே குசினி அறைக்குள் எண்டர் குடுத்தேன்.
“நீங்க வெட்டி உபயோகம் செய்வீங்களோ, வெட்டாம செய்வீங்களோ, இருக்குற வெங்காயம் raitha செய்ய தேவைப்படும்.இல்லாட்டி இன்னிக்கு பிரியாணிக்கு raitha கிடையாது”.
“சாயந்திரம் பெரியவளோட பிரண்ட்ஸ் வருவாங்க. அவுங்களுக்கு french fry செய்யணும். அதனால பாத்து உபயோகம் செய்யுங்க”.
“சரிம்மா, தக்காளி நாளைக்கு சட்னி செய்ய வேணுமா, அதை தனியா எடுத்து வெச்சிடட்டுமா”. இது நான்.
அப்படியே புள்ளைங்களும் ஆஜர். “ஹையா! இன்னிக்கு இன்னிக்கி அப்பா சமைக்க போறாரா.நாங்களும் உதவி செய்யலாமா”, இது பெரியவ கேட்டது.
“இல்ல ராஜாத்தி”, விஷயத்தை உப்பு புளி எல்லாம் போட்டு வெளக்கி சொல்ல,”அப்பா, நாங்களுப்பா, இதை முன்னாடியே சொல்லிருந்தா, எவ்வளவு கிரியேட்டிவ்வா செஞ்சிருக்கலாம்”.
“ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க கூத்தை., சாப்டுட்டு அப்புறமா என்னமோ செய்யுங்க.எனக்கு வீட்லே நெறய வேலை இருக்குது”. இது தங்கமணி.
அப்புறமா நடந்த கூத்தை 20ம் தேதிக்கு அப்புறமா படம் போட்டு விளக்குறேன்.இல்லாட்டி சர்வேசன் கோச்சிக்குவாரு.
krisperu பதிப்பித்தது. 








