தமிழர்கள் சாதிப்பிரியர்களா??

நம்ம கோயமுத்தூர் வாத்தியாரு நேத்து ஒரு பதிவு போட்டிருந்தாங்க, ஜாதிகள் இருக்குதடி பாப்பா ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்,,

அத பாத்தவுடனே ஒரு மொக்கையா ஒரு யோசனை வந்துச்சு.
முதல்லியே மூணும் மொக்கை, இது அதுக்கடுத்த உப்புமா.

(ம்ம்,செமயா மாட்டிகிட்டியா பெருசு!வேண்டாமுன்னு சொன்னா கேக்கவா போறே!பங்களாதேசதுக்கிட்ட மாட்ன இந்தியா டீமு மாதிரி உன்னை பிரிச்சு மேயப்பொறாங்க.இல்லையில்ல, இலங்கைகிட்ட மாட்ன பங்களாதேஷ் மாதிரியோ,எப்படியோ உனக்கு டின் கட்டப்ப்போறாங்க.சாக்கிரதயப்பூ.)
இப்பவே ஒருத்தனும் கண்டுக்கறதில்ல, இனி எப்படியோ.

சேச்சே,நம்மதான் தல கைப்புள்ள(எங்கிட்டுயா போனாரு,ஆளையே காணோம், யாராச்சும் துபாய்க்கு டிக்கிட் வாங்கி குடுத்துட்டாங்களா).
தொண்டர்கள் ஆச்சே, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு நல்லவங்களாத்தானே இருப்போம்.

இல்ல,நான் என்ன சொல்ல வர்ரேன்னா,இந்தியாவுலே இருக்கும்போதுதான் சாதி சங்கமுன்னு ஒரெபிலிமு காட்டுறத பாக்குறோம்.

அடேங்கப்பா, கவுண்டர், செட்டியார்,ஐயர்லே ஆரம்பிச்சு அரிசனங்களில் பல பிரிவுகள் அப்படின்னு தமிழ்நாட்டு கெசட்டுலே பாத்தீங்கன்னா, தலையிலே இருக்குற முடியை விட அதிக எண்ணிக்கையில பிரிவுகள், உட்பிரிவுகள்.

மக்கா,இதுலே எத்தன பேரு கடவுச்சீட்டு (அதாங்க பாஸ்போர்ட்)வாங்கும்போது அதுலே சாதிப்பிரிவையோ, அதுலே வர்ற உட்பிரிவையோ போட்டிருப்பீங்க.0.01% பேரு கூட இருக்கமாட்டிங்க.

ஏன்னா, இந்த சாதி சமாச்சாரம் எல்லாம் கடலைத்தாண்டுனா,என்னவாகுமுன்னு நம்ம ஐய்யாமாருங்களைத்தான்(ஐயமாருங்க இல்லீங்கோவ்)கேக்கணும்..அவங்கதானே அப்பப்ப குடும்பத்தோட வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போறவங்க.

ஆனா இதுல பாருங்க,வடநாட்டுலே இருக்கறவுங்க எங்க போனாலும் கூடவே கொண்டு போறாங்களே, அது ஏங்க???.
“யாதவ்” லே ஆரம்பிச்சு “அத்வானி,அம்பானி,கேல்வானி,கேஷ்வானி” (தேவ்யானி இவுங்கள்ள சேரமாட்டாங்க) வரைக்கும்,ஜாதியையும் உட்பிரிவையும் கூடவேதான் வெச்சிருக்காங்க.

நல்ல வேலை மக்கா, நம்மளுக்கு இங்குலீசுகாரன் வேற மாதிரி சொல்லிக்குடுத்துட்டு போயிட்டான். இனிசியல் இல்லாட்டி சர்நேம் வச்சுக்குங்க,அதாகப்பட்டது அப்பா பேர்ல முத எழுத்த போட்டுக்க, அப்பதான் எல்லாம் செல்லுபடி ஆகும்ன்னு சொல்லிக்குடுத்துட்டான்.இப்பத்தானே போன ஆட்சியிலே அம்மா பேரையும் இனிசியலா போட்டுகிட்டாலாம்,கூடவே வேணுமுன்னா ஊர் பேரயும் வெச்சுக்கங்க,அப்படின்னாங்க.

நம்ம பக்கத்து நாட்லெ, அதாங்க கேரளாவுலே எப்பவுமே குடும்பத்து பேரை அடைமொழியா சேத்துக்குவாங்க. ஆனா அத வெச்சி சாதியெல்லாம் கண்டு புடிக்க முடியாதுங்க.

இதுல மட்டும் பாருங்க, ஸ்பெயிகாரன் நம்ம ஊருக்கு வர்லயப்பூ. வந்திருந்தா நம்மபாடு டரியல்தான். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன், கேட்டுக்கங்க.

அவிங்க எல்லாம் அப்பா குடும்பத்தோட பேரு, இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரொட, அம்மா குடும்பத்து பேரு இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரு, ரெண்டையும் குழந்தையோட பேருக்கு அப்புறம் போட்டுக்குவாங்க. அதாவது சொந்தப்பேருக்கு அப்புறம் ரெண்டு சர்நேம் வெச்சுக்குவாங்க.

நெனச்சு பாருங்க இந்த முறையில ஒரே சாதியிலே கல்யாணம் செஞ்சுட்டா, பொறக்கற கொழந்தைக்கு என்ன பேரு வெப்பாங்க.

(உதாரணத்துக்கு எல்லாரும் மன்னிச்சுக்குங்க.)

நடிகர் சிவக்குமார்,மகன் சூர்யாவுக்கு,, சூர்யா கவுண்டர் கவுண்டர் அப்படின்னுதானே வெப்பார்.

இப்போ கலப்பு திருமணம் செஞ்ச சூர்யா, அவரோட குழந்தைக்கு எப்படி பேருவெப்பார்.
பொறக்குற ஆம்பிள குழந்தைக்கு அப்பா பேர வெச்சாருன்னா,

பழனிச்சாமி கவுண்டர் xxxxx. (ஜோ என்ன கூட்டம்ன்னு தெரியலீங்க)
அப்படின்னுதானே வெக்க முடியும்ம்.

ஆக வயசான காலத்துல கல்யாணப்பத்திரிக்கையிலே போடறத தவிர நம்ம குடிமக்கள், வேற இடத்துலே அதிகமா சாதிப்பேர உபயோகம் செய்யாத காரணத்தாலே,,
நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சாதிப்பிரியர்கள் இல்லை சொல்லிட்டு

ஐயாம் தி எஸ்கேப்பு.

13 பதில்கள் “தமிழர்கள் சாதிப்பிரியர்களா??” க்கு;

  1. Chinna Ammini சொல்வதென்னவென்றால்:

    சரியாச்சொன்னீங்க! சாதி பேர் போட்டுக்கறதெல்லாம் எம்பட அப்பாரு(தாத்தா) காலத்தோட போச்சுங்கோ. எங்க அப்பாவும் சாதி பேர போட்டதில்ல. நாமளும் போட்டுக்கறதில்ல.

  2. விடாதுகருப்பு சொல்வதென்னவென்றால்:

    கால்கரிசிவாவின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டம் இது!

    அட மாடு திங்கிற செளராஸ்டிர மடச் சாம்பிராணி,

    பெரியார் வந்ததற்குப் பிறகுதாண்டா நாங்கள் எல்லாம் மனிதர் ஆனோம். அதற்கு முன் இந்த பாப்பார பன்னாடைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தலையாட்டி பாப்பான் பிரம்மாவின் மூஞ்சியில் இருந்து பிறந்ததா நம்பினோம்!

    பாப்பான் மட்டும் இல்லை, செளராஸ்டிரனும் லாரில ஏத்தினா நாலு பேர் குறைவான் என்பதுதான் உண்மை.

    கேட்க மறந்துட்டேன் மாடு தின்னி, சமஸ்கிருதம் படிச்சா பாப்பானும் செளராஸ்டிரனும் ஒன்னா? உன்னிடம் பெண்கொடுத்து எடுப்பானா பாப்பார பசங்க?

  3. வடுவூர் குமார் சொல்வதென்னவென்றால்:

    ஆந்திராவை “அம்போ” என்று விட்டுவிட்டீர்களே!!
    அவுங்க சில பேர் வீட்டு/ஊர் பேர் கூட பக்கத்துலேயே வச்சுப்பாங்க.

  4. விடாதுகருப்பு சொல்வதென்னவென்றால்:

    டோண்டு இந்த மேட்டரில் வாயைக்கொடுத்து சூவைப் புண்ணாக்கிக் கொண்டான் பெருசு!

  5. பெருசு சொல்வதென்னவென்றால்:

    அடடா,கருப்பண்ணே

    பொதுவா ஒண்ணு சொன்னா ஏஞ்சாமி
    அவிங்களுக்கு தூண்டில் போடறே!

  6. பெருசு சொல்வதென்னவென்றால்:

    ஆமாங்க குமாரண்ணே

    ஆந்திரா மட்டுமில்லே,தமிழ்நாட்ட உட்டு கொஞ்சம் அந்தப்பக்கம் போனாலே போதும், ஆரம்பிச்சுடும்.

  7. பெருசு சொல்வதென்னவென்றால்:

    வாங்க ச்சின்னம்மினி

    ஊட்லே எல்லாம் சவிக்கியங்களா

    அப்பப்ப எட்டி பாத்துப்போட்டு போங்கோ

  8. விடாதுகருப்பு சொல்வதென்னவென்றால்:

    நாமக்கல் சிபியின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது. அந்த பின்னூட்டத்தினையும் மொத்தப் பதிவினையும் மீண்டும் படியுங்கள் பெருசு.

    ====================

    முதலில் ஜாதியைக் கண்டு பிடித்தது யார்?

    பார்ப்பனர்தான். அதற்கு துணையாக வேதங்களையும் இழி(தி)காசங்களையும் அழைத்துக் கொண்டார்கள்.

    தாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லி மன்னனை நம்ப வைத்து பெரிய பதவிகளை வாங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு பெரிய பதவிகளுக்கு மற்ற யாரும் வரவிடாமல் தடுக்க செய்கின்ற தொழிலை வைத்து ஜாதிகளைப் பிடித்தார்கள்.

    அன்றைக்கு அவர்களுக்கு ஜாதிகள் தேவையாக இருந்தது. அவசியமாக இருந்தது. எனவே பிரித்தார்கள். தம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டினார்கள்.

    திராவிடன் என்றும் பஞ்சமன் என்றும் சூத்திரன் என்றும் சத்திரியன் என்றும் கலர் கலராக வர்ணங்களைக் கொண்டு மக்களைக் கூறு போட்டார்கள்.

    ஆனால் இன்றைக்கு இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் அதெல்லாம் முடியாது என்கின்றனர். அன்றைக்கு ஜாதியை அவர்கள் கண்டு பிடித்ததால்தானே இன்றைக்கு இவ்வளவும்? ஜாதியால் பிரிக்கப் பட்ட மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. ஏழையாகவே பிறந்தனர், வாழ்கின்றனர். பல கால கட்டங்களில் அவர்களுக்கு கல்வி உரிமைகூட மறுக்கப் பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுத்தால் பார்ப்பனர்கள் ஒப்பாறி வைக்கின்றனர். குய்யோ முறையோ என குதிக்கின்றனர்!

    சரி அது போகட்டும்.. பெயருக்குப் பின்னால் ஏன் ஜாதி? அதெல்லாம் ஒன்னும் இல்லை. பெயரை அழைக்கும்போது ஜாதியும் கூடவே வரும். அப்படி கூடவே வந்தால் அந்த பெயரை மக்கள் மறந்து விடாமல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தால் பார்ப்பனர்கள் மேலோர் என்று மக்களை இன்னமும் எஞ்சிய காலத்திற்கும் நம்ப வைக்க முடியும். அதனால்தான் ஜாதிப் பெயர் அவர்களுக்கு வேண்டும். ஜாதிப் பெயரைச் சொல்லி அழைப்பதன் மூலம் ஒருவனை தொடலாமா தொடக் கூடாதா என்று தீண்டாமையை முடிவு செய்யலாம் அவர்கள்!

    தெருக்களின் பெயர்களில் ஏன் ஜாதி வேண்டும்? இதற்கும் மேலே சொன்ன காரணம்தான். நாம் அழைக்கும்போது ஜாதியையும் சேர்த்தே சொன்னால் ஜாதிப்பெயர் அழியாது. இன்னும் வளரும். மக்கள் மனதில் நீடித்து நிற்கும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிரம்மன் மூக்குச் சளியில் இருந்து பிறந்தான் என்று புரூடாக் கதைகளை அள்ளி விடலாம்!

  9. பெருசு சொல்வதென்னவென்றால்:

    அண்ணே கருப்பண்ணே

    //இந்த சாதி சமாச்சாரம் எல்லாம் கடலைத்தாண்டுனா,என்னவாகுமுன்னு நம்ம ஐய்யாமாருங்களைத்தான்(ஐயமாருங்க இல்லீங்கோவ்)கேக்கணும்..அவங்கதானே அப்பப்ப குடும்பத்தோட வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போறவங்க//

    இதத்தானுங்க நான் கோடு போட்டு காட்டுனேன்.

  10. குறும்பன் சொல்வதென்னவென்றால்:

    பட்டேலை மறக்கலாமா?

    உண்மைதானுங்க வடநாட்டுக்காரங்க மாதிரி நம்மூர்காரங்க சாதியை பின்னாடி போட்டுக்கறதில்லை.

    “ஜோ” நக்மாவோட தங்கச்சி அவங்க “கான்” அல்லது “மரைக்காயர்” அல்லது “உசேன்” … கூட்டமா இருக்கலாம்.

    //இப்போ கலப்பு திருமணம் செஞ்ச சூர்யா, அவரோட குழந்தைக்கு எப்படி பேருவெப்பார்.
    பொறக்குற ஆம்பிள குழந்தைக்கு அப்பா பேர வெச்சாருன்னா,

    பழனிச்சாமி கவுண்டர் xxxxx//
    பழனிச்சாமி கவுண்டர் கான் அல்லது பழனிச்சாமி கவுண்டர் மரைக்காயர் அல்லது பழனிச்சாமி கவுண்டர் உசேன் அல்லது பழனிச்சாமி கவுண்டர் ராவுத்தர் :-) )

  11. பெருசு சொல்வதென்னவென்றால்:

    குறும்பன்

    ஆனாலும் ரொம்ப அக்குறும்புங்கோ.

  12. Madura சொல்வதென்னவென்றால்:

    இந்தப் பதிவுக்கு வர பயமாருக்குங்க :)
    நீங்க சொன்ன இரண்டு பாயின்டு ரொம்ப கரெக்டுங்க.
    1. தமிழ்நாட்டுக்காரேன் கடைசிப்பேரு வச்சிக்கிறதில்லை. (இதை நினைச்சு நானும் ரொம்ப பெருமை பட்டிருக்கேன்! – யாரு செஞ்சாங்க இந்த நல்ல மாற்றத்தைன்னு தெரியாது எனக்கு – ஆனா முக்காவாசி பேரு கடைப்பெயர் போட்டுக்கிறதில்லைங்கிறது அருமை. இனிஷியல் ஐடியாவுக்கு ஜே)

    2. கடல் தாண்டியாச்சுன்னா, இந்த இம்சை இல்லவே இல்லை.
    கரெக்டு தலைவா.

  13. கருப்பையா சொல்வதென்னவென்றால்:

    தமிழ்நாட்டில் கருணாநிதி ராமதாஸ் போன்ற தெலுங்கு அரசியல்வாதிகள் நடமாடும் வரை…தமிழ் இனம் தொலைந்து சாதி இனம் தான் முன்னுரிமை பேறும்.

    —-
    “”"முதலில் ஜாதியைக் கண்டு பிடித்தது யார்?

    பார்ப்பனர்தான். அதற்கு துணையாக வேதங்களையும் இழி(தி)காசங்களையும் அழைத்துக் கொண்டார்கள்.

    தாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லி மன்னனை நம்ப வைத்து பெரிய பதவிகளை வாங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு பெரிய பதவிகளுக்கு மற்ற யாரும் வரவிடாமல் தடுக்க செய்கின்ற தொழிலை வைத்து ஜாதிகளைப் பிடித்தார்கள்.”"”

    விடாது கருப்பு அவர்களே, இப்போது சாதியை பரப்பும் ‘மாவீரர்கள்’ யார்? நமது தெலுங்கு அரசியல்வாதிகளின் அடியாட்கள் நிறைய பேர்…
    —–
    நீங்கள் பாப்பான் அவர்களை வேறுக்குறீர்கள் …ஆனால் அவர்கள் தமிழ் தான் பேசுவார்கள். தமிழ் நாட்டு சாலை பணிகள், விமான நிலைய பணிகள் ஏன் இட ஒதுக்கீடு சாதிகள் – நிறைய தமிழ் அற்ற சாதிகள் உள்ளன – இந்தி பேசுபவர்கள் இவர்கள் உங்கள் நண்பர்களா? கவலை வேண்டாம் இவர்களும் இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெறுவார்கள். .

    உங்களுக்கு பிரிட்டிஷ் காரன் மோகம் உள்ளது போல் தெரிகிறது. அவன் சாதியை தலைத்தூக்கி பிரிவுகளை வலுப்படுத்தினான். பிரிட்டிஷ் கார ஆதரவாளர்கள் நமது தமிழக தெலுங்கு அரசியல் வாதிகளின் முன்னாள் கட்சி எனவும் உங்களுக்கு தெரிந்ததா ?

    நமது தெலுங்கு அரசியல் வாதிகள் இந்தி தெலுங்கு சாதிகளை ‘தமிழ்ர்கள்’ எனவும் தமிழ் பேசும் சாதிகள் நிறைய பேர் அந்நியர்கள் எனவும் ஆக்கிவிட்டனர். உங்களுக்கு புரியவில்லை என்றால் OBC பட்டியலை சற்று நோக்கவும்.

    பார்ப்பான் நாய். பாப்பான் சாவனும் . பாப்பான் அடிக்கணும் .. பலே. உங்கள் பிரச்சினை தீருமா? நமது தெலுங்கு அரசியல் வாதிகள் ரொம்ப நல்லவர்கள் இல்லையா? தமிழ் பண்பாட்டின் பெயரில் சாதி அட்டுழியங்கள் ஏற்பாடுகள் அவர்களுடையது தான்.

    உங்கள் வலைப்பதிவை பார்த்தால் உங்களுக்கும் தெலுங்கு அரசியல் வாதிகளைப் போல் தமிழ் மீது பயங்கர வெறுப்பு உள்ளது போல் தெரிகிறது.

மறுமொழி இடுக