தோத்தா அதுக்காக இப்ப என்ன முகாரி ராகமா பாட முடியும்.காலேஜுல படிக்கிற எலலாருமா அரியர்ஸ் இல்லாம பாஸ் செய்யுறாங்க.
தோல்வியே வெற்றிக்கு முதல்படி. கசப்பு என்று ஒரு சுவை இருப்பதால்தான் இனிப்பு என்ற சுவை மேலாதாக தோன்றுகிறது .
இப்படி எல்லாம் சொல்லி மனச தேத்திக்கலாமுன்னு பாத்தா முடியலியே மக்கா.
நேர்ல போய்தான் வெக்கணும்ன்னு நெனச்சேன்.ஆனா அந்த தகுதி கூட நம்ம இந்திய டீமுக்கு இல்லிங்க.
அவுங்க ஆதமா சாந்தியடைய பிரார்த்திக்கவும்.
ஏதோ என்னால முடிஞ்சது ,இந்த மலர் வளையம்தான்.
16ம் நாள் காரியங்கள் கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடைபெறும்.











11:45 மு.பகல் இல் மார்ச் 24, 2007
என்ன சொல்றீங்க. நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.
11:45 மு.பகல் இல் மார்ச் 24, 2007
எல்லாம் சரி. ஆனா முகாரி ராகம் என்பது சோக ராகம் இல்லை என்பது என் கருத்து. மிக அழகாக பக்தியை வெளிப்படுத்தக்கூடிய ராகம். மன அமைதியைத் தரும் ராகம். தியாகய்யர் இதில் ஆனந்தத்தைக் கூட அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சிலர் பாடும் பொழுது மட்டும் சோகம்தான் மிஞ்சுகிறது. என்ன செய்ய!!