இது போல் நடக்குமென்று கனவிலும் யாரும் நினைத்தும் பார்த்திராத ஒரு நிகழ்ச்சி. திரைப்படங்களிலும் கற்பனைக்கதைகளிலும் மட்டுமே பார்த்து, படித்து வியப்புற்றது.
நேற்று வர்ஜினியாவில் நடந்த துப்பாக்கி சூடு அல்லது படுகொலைகள் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். நேற்று செய்தியாக படித்த போதும் இரவு Larry King Live யிலும் பார்த்த போதும் சற்றேர விளங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கும் இரண்டொரு நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று எனது வியர்டு மனம் அசை போட்டது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிக எண்ணிக்கையில் படிப்பவர்கள் தென் கொரிய மாணவர்கள்.மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 18%.அடுத்து வருபவர்கள் இந்தியர்கள். 15%.
இந்தியர்களுக்கு அடுத்துதான் சீனர்கள்.
அதிக எண்ணிக்கையில் படிக்கும் தென்-கொரியர்களை குறைப்பது எவ்வாறு.
அதற்கான திட்டத்தின் முதல்படிதான் இந்த நிகழச்சியின் கொலையாளியை
தென் கொரிய மாணவராக அடையாளம் காட்டுதல்.
தேவைப்படும்போது கூட்டு/கூட்டி வைத்து கொஞ்சிக் குலாவுவதும்
தேவை இல்லாதபோது குல்லாப்போடுவதும் ஆங்கிலேயைகளுக்கு கைவந்த
கலை ஆயிற்றே.
பார்த்துக்கொண்டே இருங்கள்,புதரகத்தில் இருக்கும் நமது பங்காளிகளுக்கும்
இந்த நிலை வரக்கூடும். ஏனெனில் புலம்பெயருபவர்களில் முதல் இடத்தில்
இருப்பவர்கள் நமது இந்தியர்களே.
இப்படுகொலையை செய்ததாக கருதப்படும் சோ சேவுங் உய் இன்
அறையில் கண்டெடுக்கப்பட்டவை .
“சோ” வின் நண்பர்களும் ஆசிரியர்களும் கூறியவற்றை தொகுத்தால்
சோ ஒரு வியர்டுதான். (தலைப்பு உள்ள வந்தாச்சு)
உண்மையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு காரணம் என்ன? ,
இது போன்று ஒரு நிகழ்ச்சி உலகத்தின் எந்த ஒரு பகுதியில் நடந்தாலும்
அதை மீடியாக்கள் இவ்வளவு பரபரப்புடன் காண்பிக்குமா.
மாண்டவர்களின் குடும்பங்களுக்கும் உற்றார் உறவினருக்கும் பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.
krisperu பதிப்பித்தது. 
krisperu பதிப்பித்தது. 

krisperu பதிப்பித்தது. 


![UT 3, 4 & The Milky Way [video] UT 3, 4 & The Milky Way [video]](http://static.flickr.com/2633/4135738280_d16c9dd389_t.jpg)





