முரசொலியின் முதல் பக்கத்தில் இப்படித்தன் இருக்கும் இன்று.
அன்பு உடன் பிறப்பே
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். .கழகத்தில் பல கலைகளையும் கற்றதுஎமது குடும்பம்.இக்குடும்பத்தில் நீயே உயிர்த்தூண்.
வேண்டாமடா கண்மணிகளே! கண்ணாடி வீட்டிற்குளிருந்து கல்லெறிய வேண்டாம். ஒரே குடும்பமாகிய எமது கழகத்தில் கலகமுண்டாக்க வேண்டுமென்று எதிர்க்கட்சி கூடாரத்தில் உருவாக்கிய சதித்திட்டத்தை முறியடிக்க எனதன்பு மாறன் இல்லாமல் போய் விட்டான். உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கவாமுடியும், பின் இக்கோட்டான்களின்
கொட்டம் இன்னமும் அதிகமாகி விடுமே. விடும் விடுமென தோள் தட்டி போர் முரசு கொட்டவேண்டிய நேரமல்ல இது.புலி பதுங்குவது பாய்வதற்கேயன்றி ஓணான்களுடன் பாய் விரித்து படுப்பதற்கல்ல.
போய்யா போவென்று பதவி கூறுகிறது.வாய்யா வாவென்று காடு அழைக்கிறது. இதற்கிடையில் நம் பாசப்பறவைகளின் உரசல் கழகத்தை கிடையில் தள்ளிப் பார்க்கிறது. கத்தியை தீட்டாதே ! புத்தியை தீட்டென்றனறு எனதருமை அண்ணா கூறினானே! நினைவிருக்கிறதா உனக்கு..
பொன்விழாக்கொண்டாத்திலே பசுத்தோல் போர்த்திய நரிகள் உலா வருகின்றன. அவற்றை கண்டெடுத்து பல் பிடுங்கும் கடமையும் வீரமும் உனக்கில்லையா. கைதட்டி ஆடிப்பாட வேண்டிய இந்நேரத்திலே நயவஞ்சகர்கள் கைகொட்டி சிரிக்க,ஆர்ப்பரிக்க காரணமென்ன கண்மணி.
திரும்பிப்பார்! நாம் கடந்து வந்த போர்க்களங்கள் எத்துணை, வாங்கிய விழுப்புண்கள்தான் எத்துணை. வளத்தகடா மார்பில் பாய்ந்த கதையை நீயும் படித்திருப்பாய், அதன் விளைவுகள்தான் என்னவென்று ஒருகணம் சிந்திந்துப்பார். எள்ளி நகையாடுவோர்,நிந்திப்போர் சுற்றியிருக்க,
சொந்த வீட்டில் கன்னம் வைக்க மனது கொள்ள வேண்டாமடா செல்வனே.
என்னை கொல்லாமல் கொல்கிறது இப்பித்தலாட்டக்காரர்களின் அம்புகள்.
மகாபாரதப்போரில் பிதாமகர் அம்புப்படுக்கையில் வீற்றிருந்து வரம் கேட்டார். நான் உங்கள் அன்புப்படுக்கையிருந்து கேட்கிறேன் வரம்.
அமைதி காத்தருளுங்கள்! வெற்றி நமதே.
அண்ணா நாமம் வாழ்க.










4:11 பிற்பகல் இல் மே 12, 2007
பெருசு எனக்கு என்னமோ நீங்கதான் கலைஞ்சருக்கு முரசோலியில் பினாமியோனு சந்தேகமா இருக்கு.
வார்தை ஜாலங்கல் சூப்பர். முதல் வரி சரியா படிக்கவில்லை என்றால் நான் இதை நம்பியே இருப்பேன்