முகப்பு > அரசியல், கடிதம் > இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

எந்தப்படத்துலே எந்தப்புண்ணியவான் எழுதிய வசனம்யா இது.இப்ப நாடு இருக்குற நெலமையிலே நம்ம ஆட்சிலே இருக்குறவங்க சொல்லாம சொல்லுற வசனமய்யா இது.

ஆட்சி முறை மாறுகிற வரை ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள். எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவை உதாரணம் காட்டும் புண்ணியகோடிகளையும் ரஷ்யாவையும் , கூபாவை இழுக்கும் தனவான்களையும் குற்றம் கூறி பயனில்லை.

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் உண்டு என்று கூறியது எந்தவொரு கணத்தில், அந்த அர்த்தத்தை அனர்த்தமாக்கி மாற்றான் தோட்டத்து மல்லிகையை
கவர்ந்து கொண்டு வந்து,அடிமை சாசனம் எழுதி கோடிகளில் குளிக்கும் கோமான்களின் சித்து விளையாட்டுகளின் பலியாடுகளில் அவர்களின் குடும்பங்களும் விதிவிலக்கல்ல.
(கஞ்சா கற்றுக்குட்டிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பேற்க மாட்டேன்).

ஆட்சியை ஏனய்யா ஒரே ஆளும் ஒரே குடும்பமும் நடத்த வேண்டும், இதென்ன மன்னர் ஆட்சி முறையா. அதைத்தான் அம்பேத்கரும் வல்லபாய் படேலும் ஒழித்து விட்டு மக்களாட்சியை புகுத்தி பன்னெடுங்காலமாகி விட்டதே.

முதல்குடிமகனின் பேச்சு வெறும் சுரைக்காய்க்குதானோ. நாட்டில் இரு கட்சி கொள்கைக்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனைனில் வருமானம் கிடையாதே.

கவரிமானின் பரம்பரைகள் வாரிக்கொண்டு போக வாரியம் கிடைக்கவில்லை என்றால் ஒரு கட்சியும், கூடவே கூத்தடிக்க கோவேறு கழுதைகளும் வெளியேறும். சீட்டுக்கட்டு கோபுர வஸ்து ராஜாக்களுக்கும், அரிதார மங்கைகளுக்கும் கிடைத்த,
கிடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் படித்த திறமைக்கும், பாட்டாளிகளுக்கும் கிடைப்பதில்லையே இத்திருநாட்டில்.

நாமெல்லாம் செத்தபின்னும், சனிக்கிழமை சனிபகவானுக்கும் பயன்படுத்தும் ஒரு பொருள் எள், இப்பொருளை பெட்டி பெட்டியாய் வாங்கி வந்த இரஷ்யா, இந்தியாவின் தரம் சரி இல்லை என்று கொள்முதலை நிறுத்தி விட்டது. இதனைப்பற்றி எந்த ஒரு ஊடகத்திலாவது முதலைக்கண்ணீராவது வடித்தனரா , இல்லை ஒரு கருத்துக்கணிப்புதான் நடத்தினரா.

வரும் 2008ல் பக்கத்து நாடான சைனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ள எத்துனை P.T.உஷாக்கள் தயார்படுத்தியுள்ளனர். அனைத்து ஊடகங்களும் இதன் பக்கமே தலை வைத்துப்படுப்பதில்லை. கருத்துக்கணிப்புதான் நடக்குமா.

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்த காரணத்தால், கடன்களின் மீது வட்டி விகிதம் உயர்ந்த காரணத்தால் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் லாபமிழந்த வியாபாரிகள் எத்தனை பேர் என்ற கருத்துக்கணிப்பு நடந்ததா.

ஏறி வந்த ஏணிப்படியை எட்டி உதைத்து எக்காளமிட்ட
எத்தர்களின் கதையை எத்தனை பிரச்சாரங்களில் கேட்டு
விட்டோம். நான் ஏணியென்று குறிப்பிடுவது ஏமாளி மக்களையும் எத்தர்களென்று கூறுவது யாரென்றும் உங்களுக்கே தெரியும்.

அரசியலில் நாடகங்கள் இயல்பென்றாலும் சிலப்போது
அவை கூத்துகள் ஆகி பார்வையாளர்களை முட்டாளாக்கி
விடுவதுமுண்டு.

கணக்கு கேட்டவனை கூத்தாடி என்றும், வேற்று தேசத்தானென்றும் வசை பாடியதை இந்நாடறியும்.

பங்கு கேட்ட உடன்பிறவாத்தம்பியை கொலைக்கழுவிலேற்றி, பின் மன்னிப்பது போல் ஆரத்தழுவி மற்றுமொரு முறை முதுகில் தட்டுவது போல் துரோகி பட்டமளித்து நம்மையில்லாம் இ.வா. செய்யத்தும் இக்கூத்துகளில் ஒன்றுதான்..

மீண்டுமொரு முறை நாடகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை குடும்பமே நடிக்கிறது.
முடிவு யார் கையில். கைக்கோளிட்டு காட்ட ஒரு புதுத்தலைப்பு கிடைத்துவிட்டது.

என்மகன், முதல்வன், உறவைக்காத்த கிளி,பாசப்பறவைகள், இதெல்லாம் பழைய மொந்தை.

புதுக்கள் புது மொந்தை தயாராகிறது.
எனக்கும் ஆட்டோ வ்ருகிறது.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது டமிளாக இருக்கட்டும்.

  1. Chinna Ammini
    2:42 மு.பகல் இல் மே 15, 2007 | #1

    நம்மல்லாம் எப்பதான் திருந்தப்போரோமோ. ம்ம்ம்ம்

  2. aruppukottaiyan
    2:43 மு.பகல் இல் மே 15, 2007 | #2

    I think the dialogue you mentioned was written by none other than current tamil nadu chief minister M. Karunanidhi( if my memory serves me right) and uttered by the great villain of tamil filmdom P.S. Veerappa. the movie name is mahadevi, i guess :-)

  3. துளசி கோபால்
    12:12 பிற்பகல் இல் மே 15, 2007 | #3

    மக்கள்ஸ் இப்படி எல்லாம் நொந்துக்கிடறதைத் தவிர வேற வழி இல்லையா?

  4. VSK
    12:12 பிற்பகல் இல் மே 15, 2007 | #4

    எத்தனை சொல்லியும், எவர் சொல்லியும் திருந்தாக் கூட்டமொன்று தமிழகத்தைக் காவு வாங்க திட்டமிட்டு நடத்துதைய்யா தனிக்காட்டு தர்பாரொன்று.

    குடும்ப அரசியலில் கொஞ்சுதமிழ்த் தாய்நாட்டை[தாய்நாடா இது இவர்களுக்கு??????????] தன் காலடியில் பந்தாடும் வீணர்களைத் தமிழகமே!… எத்தனை நாள் தாங்கப் போகிறாய்!?

  5. பெருசு
    5:06 பிற்பகல் இல் மே 15, 2007 | #5

    //மக்கள்ஸ் இப்படி எல்லாம் நொந்துக்கிடறதைத் தவிர வேற வழி இல்லையா? //

    வேற வழி இருக்குங்க துளசிக்கா,
    அந்த வழி மக்களோட மனசுக்குள்ள
    இருக்கு.

    இன்னும் எத்தனை நாளைக்கு ஆடுவாங்களோ , பாக்கலாம்.

  6. பெருசு
    5:08 பிற்பகல் இல் மே 15, 2007 | #6

    //நம்மல்லாம் எப்பதான் திருந்தப்போரோமோ//

    சின்ன அம்மணி , வாங்க வாங்க.

    இப்பிடி இவ்வொருத்தரும் நெனச்சாலே
    போதுமே, தானா தலைகள் ஆடிப்போயிரும்.

  7. பெருசு
    5:10 பிற்பகல் இல் மே 15, 2007 | #7

    வாங்க புதுக்கோட்டையாரே

    நீங்க நம்ம காலத்துகாரரா இருப்பீங்க போல இருக்கே.

  8. பெருசு
    5:24 பிற்பகல் இல் மே 15, 2007 | #8

    vsk ஐயா

    “இன்னும் எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”
    என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.